அறிவியல் - தொழில்நுட்பம்
பூமிக்கு அப்பால் உயிரினம்
விண்வீழ்கற்களில் புதையுண்ட நுண்ணு யிரிகளைத் தாம் கண்டறிந்துள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி ரிச்சார்ட் ஊவர் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நுண்ணுயிர்கள் பூமியில் இருப்பவற்றுக்கு ஒத்ததாக இருக்க வில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவ்வாய்வு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், பூமியில் மட்டுமல்லாமல் பேரண்டத்தில் உயிரினங்கள் பரவலாக வாழ்வதும், சூரிய மண்டலத்தில் உலாவும் வால்நட்சத்திரம், நிலாக்கள் மற்றும் விண்பொருட்களில் இருந்து பூமிக்கு உயிரினம் வந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. நாசா விஞ்ஞானி ரிச்சார்ட் ஊவரின் இவ்வாய்வு பற்றிய அறிக்கை அண்டவியல் ஆய்வேட்டில் (Journal of Cosmology) வெளி யிடப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர்கள் உண்மையில் வெளியுலக உயிரா என்பது முழுமையாக நிரூபிக்க முடியாததெனிலும் இது ஒரு முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது. மிகவும் அரிதான சிஐ1 சார்பனேசசு கொண்ட் ரைட்ஸ் (CII Carbonaceouts chondrites என அழைக்கப்படும் விண்வீழ்கற்கள் (meteorites ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வகையான ஒன்பது விண் வீழ்கற்கள் பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதர அறிவியலாளர்கள் இது பற்றிய இன்னும் சில ஆய்வுகளும் ஆழ விசாரணைகளும் தேவை எனக் கூறி உள்ள னர். ""இவ்வாறான அறிக்கைகள் இதற்கு முன்னரும் வெளிவந்துள்ளது,'' என நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி டேவிட் மொராயசு தெரிவித்தார். ""இது ஒரு அசாதாரண ஆய்வு முடிவு. இவ்வாறான முடிவுகளுக்கு உறுதிப் படுத்தக்கூடிய சான்றுகளை எதிர்பார்க்கிறேன்,'' என்று மேலும் அவர் கூறினார்.
குளோரி விண்கலம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் கலிலிபோர்னியாவில் இருந்து அனுப்பப்பட்ட குளோரி என்ற விண்கலம் ஏவிய சில நிமிட நேரத்தில் குறித்த இலக்கை அடையாமல் பசிபிக் பெருங்கடலிலில் வீழ்ந்தது. காலநிலை (ஹங்ழ்ர்ள்ர்ப்) தாக்கத்தினை அறிவதற்காக இந்த விண்கலம் உருவாக்கப் பட்டது. இதன் தோல்வியினால் நாசாவிற்கு 424 மில்லிலியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ள தாகக் கணிக்கப்பட்டுள்ளது.
விண்கலம் புறப்படுவதற்கு முன்னர் எவ்வித கோளாறும் இருக்கவில்லை என நாசா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனாலும் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இழுவைக் குறைப்பமைவு (fairing) எனப்படும் விலகல் இடம்பெறவில்லை. ""கோள்பாதையில் செலுத்த தங்களால் முடிய வில்லை எனவும் விண்கலம், அதனைக் கொண்டு சென்ற ஏவுகணையும் பசிபிக் கடலிலின் தென்பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் வீழ்ந்திருக்க வேண்டும் என நம்புகிறோம்,'' என அவர் கூறினார்.
டிஸ்கவரி விண்கலம்
அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு சென்ற மாதம் ஏவப்பட்டது.
எஸ்டிஎஸ்-133 என்ற டிஸ்கவரியில் ஆல்வின் ட்ரூ, நிக்கோல் ஸ்டொட், எரிக் போ, ஸ்டீவன் லின்ட்சி, மக்கல் பாரட், ஸ்டீவ் போவன் ஆறு விண்வெளி வீரர்களுடன் இது புறப்பட்டது. 11 நாட்கள் விண்ணில் தங்கி யிருக்கும் இவ்விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு புதிய களஞ்சிய அறை ஒன்றையும், உயர் தொழில்நுட்ப எந்திரன் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளது.
1984-ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்ணுக்கு ஏவப்பட்ட டிஸ்கவரிக்கு இது 39-ஆவது பயணம் ஆகும். இப்பயணத்துடன் இது மொத்தம் 230 மில்லிலியன் கிமீ தூரம் பறந் திருக்கிறது. இந்த 39-ஆவது பயணத்திற்கு எஸ்டிஎஸ்-133 (STS-133) எனப்பெயரிடப் பட்டுள்ளது. நாசாவின் விண்கலங்கள் அனைத்தும் இவ்வாண்டு இறுதிக்குள் ஓய்வெடுக்க இருக்கின்றன. அதன் பின்னர் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் செல்லத் திட்ட மிடப்பட்டுள்ளது. "ஆஸ்டிரோயிட்' எனப் படும் சிறுகோள்களை நோக்கி மனிதர்களை அனுப்புவது நாசாவின் அடுத்த திட்டங்களில் ஒன்றாகும்.
வெண்கலக் கால மனித எலும்புகள்
ஸ்காட்லாந்தில் வெண்கலக் கால மனித எலும்புகள் அடங்கிய இரண்டு ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கசு என்ற பிரதேசத்தில் உள்ள கிரிமுயர் என்ற நகரில் உடைந்த கற்பாறை ஒன்றின் கீழே இந்தச் ஜாடிகள் தொல்லிலியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதைகலங்களும் 4, 000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வகையான கலங்கள் வெண்கலக் காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியைச் சேமிக்கப் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. இக்கலங்களில் ஒன்று 4 அங்குல விட்டமுடையதென்றும், மற்றென்று 8 அங்குலம் எனவும் தொல்லிலிய லாளர்கள் தெரிவித்துள்ளனர். ""வெண்கலக் காலத்தில் இறந்தவர்கள் விறகுகளைக் கொண்ட அடுக்குகளில் வைத்து எரிக்கப்பட்டு பின்னர் அவர்களின் எலும்புத்துண்டுகள் சேகரிக்கப்பட்டு இவ்வாறான ஜாடிகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன,'' என மசெல் பரோவைச் சேர்ந்த தொல்லிலியலாளர் மெலனி ஜோன்சன் தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட கலங்களில் பெருமளவு எலும்புத்துண்டுகள் காணப்பட்டதாகவும், இவற்றைக் கொண்டு அந்த எலும்புகளுக்குரியவரின் பால், வயது, அவர்கள் எவ்வகையான நோய்களால் பாதிக்கப்பட்டனர் போன்ற விபரங்களைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
11 கோடி ஆண்டு டைனோசர்
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் 1994-ஆம் ஆண்டு, சுரங்கம் தோண்டும்போது சில எலும்புகள் கிடைத்தன. அதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறையினர், விலங்கியல் நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தினர். ஆய்வில் இரண்டு விலங்குகளின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. இது டைனோசர்களிலேயே மிகவும் வலிமையுடன் காணப்பட்ட பிரான் டோமொஸ் வகையைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் பிரான்டோ மொஸ் என்பது "இடிபோன்ற தொடை' என்பதைக் குறிக்கும். இவை 11 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்தவை. ஒன்று தாயும் இன்னொன்று அதன் குட்டியுமாக இருக்கலாம். இவற்றின் கால்களும் தொடை களும் பலம் வாய்ந்ததாக இருந்துள்ளன. இரைகளைப் பிடித்து உண்ணும் வகையில் இவை பயன் பட்டிருக்க வேண்டும். டைனோசர் வகை யிலேயே வலுவானதாக, மற்ற விலங்கினங் களை மிரட்டும் வகையில் இவை இருந்திருக்க வேண்டும். இந்த இனம் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்திருக்கலாம் என்று தெரிகிறது.
சந்திரனில் பதுங்கு குழியை சந்திராயன் கண்டுபிடித்தது
நிலாவில் விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்றவகையில் 1 கி.மீ. நீளமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட குகை வடிவிலான மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பதை சந்திராயன் கண்டு பிடித்துள்ளது. எந்தவித சேதமும் இல்லாமல் மிக நேர்த்தியாகவும் குகை வடிவிலும் உள்ள அந்த பதுங்கு குழியானது நிலாவில் ஏற்படும் கதிரியக்கம் உள்ளிட்ட இயற்கை பருவ மாற்றங் களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்கிறது.
நிலாவில் அதிகபட்ச மாக 130 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருப்பது வழக்கம். ஆனால் இந்த பதுங்கு குழியை பொருத்தவரை சராசரியாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும், ஏராளமான அறிவியல் ஆராய்ச்சி கருவிகளையும் அங்கு வைத்துக் கொள்ள முடியும்.
ஆர்டிக் பனிகட்டிகளுக்கு அடியில் உயிரினங்கள்
ஆர்டிக் பனிக்கடல் பகுதிகளுக்கு அடியில் கடல்சார் உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரின ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது பனித்துருவத்திற்கு கீழே வேறு ஒரு புதிய உலகம் இருப்பதை எடுத்துக்காட்டும் இந்த ஆய்வு, பல ஆச்சரியமான, அற்புதமான கண்டு பிடிப்பாகவுள்ளது. கடல்சார் உயிரினஆய்வாளர் அலெக்சாண்டர் செமேனோவ் ஆர்டிக் பகுதிக்கு கீழே உள்ள உயிரினங்கள் குறித்து 2 ஆண்டுகள் ஆய்வு செய்தார். மிக அபாயகர மானச் சூழலில், புறக்கதிர்கள், பின் தங்கிய வொயிட் சீ பயாலஜிகல் நிலையத்தில் இந்த ஆய்வினை நிகழ்த்தினார். ஆர்டிக் கடல் பனிக் கட்டியை துளைத்து தண்ணீருக்கு அடியில் மைனஸ் டிகிரி வெப்பநிலையில் அந்த ஆய்வினை மேற்கொண்டார். ஆர்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் இதற்கு முன்னர் பார்த்த உயிரி னங்கள் ஒத்ததாக இல்லை என அலெக்சாண்டர் கூறினார். நீருக்கு அடியில் முதன்முறையாக பயணித்தபோது, வேற்று கிரகத்தை போன்று கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment