Monday 22 August 2011

வை.மு.கோதைநாயகி அம்மாள்


வை.மு.கோதைநாயகி அம்மாள்




கோதைநாயகி அம்மாள் 1901ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார். தனது ஐந்தரை வயதில் திருமணம் முடித்தார். இவர் முறையாக கல்வி பயிலவில்லை . மாறாக, 12 வயதில் தனது சித்தப்பாவிடம் தமிழ் எழுத்துக்களை பயின்றார். கணவரிடம் தமிழ் நூல்களைப் பற்றி தெரிந்து கொண்டார். தெலுங்கு மொழியும் கற்றுக்கொண்டார்.
இவர் முதன் முதலில் எழுதிய நாவல் 'ஆத்மசக்தி'. பின் இவர் எழுதிய முதல் நூல் 'இந்திரமோகனா' நாடக வடிவம் பெற்றது. முறையான படிப்பில்லாமல் தானாகவே கற்றது மட்டுமின்றி பெண்கள் வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க தொடங்கினார்.
அப்போதைய காலத்தில் தேவதாசிகளின் சீரழிந்த வாழ்க்கை முறை குறித்து 'வைதேகி' என்ற நாவலை எழுதினார். 1925ல் "ஜகன்மோகனி' என்ற மாத இதழை தானே வாங்கி அதில் 'வைதேகி' நாவலைத் தொடராக வெளியிட்டார். 
மயிலாப்பூருக்கு மகாத்மா காந்தி வருகை தந்தபோது, கோதைநாயகி அங்கு சென்று அவரை பார்த்தார். இந்த சந்திப்பு இவரது வாழ்க்கையில் ஒரு புது விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து கோதைநாயகி அம்மாள் கதர் ஆடையை அணியத்தொடங்கினார். வீதி வீதியாகச் சென்று கதர் ஆடை விற்பனையும் செய்தார். 1929ல் திருவல்லிக்கேணியில் 'சுதேசி லீக்' என்ற சங்கம் அமைத்தார்.
மும்பையில் நடந்த காங்., மாநாட்டில் கலந்து கொண்ட இவரின் குரல் வளத்தை பல தேசிய தலைவர்களும் பாரட்டி, இவரை தேசியப் பாடல்கள் பாட அழைத்தனர். இவரது நூல்களில் பெண் கல்வி, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார். 1950, பிப்., 20ம் தேதி மறைந்தார். சென்னைக்கு பெருமை சேர்த்தவர்களில் கோதைநாயகி அம்மாளை மறக்க முடியாது.

No comments:

Post a Comment