Monday, 22 August 2011

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்

1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தனது 12வது வயதில் கணிதத்தில் திடீர் ஆர்வம் ஏற்பட்டு, கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சியெடுத்தார்.

அப்போது மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜருக்கு சிறிய வேலை ஒன்று கிடைத்தது. துறைமுகத் தலைவரும்,மேனேஜரும் ஒரு முறை ராமானுஜரின் கணிதத் திறமையை அறிந்து கொள்ள முடிந்தது. இவரது முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த மேனேஜர் எஸ்.என்.அய்யர், ராமானுஜம் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார். அவ்வாறு முதலில் அனுப்பி வைத்தமைக்கு ஒருவித பதிலும் இல்லை.

1913ம் ஆண்டு ராமானுஜர் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு அனுப்பி வைத்தவை, இவரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த கணித இணைப்புகளை கண்ட உடனேயே ஹார்டி, இது ஒரு சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு என்பதை புரிந்து கொண்டு, ராமானுஜரை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வர அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே கணித மேதைகளால் போற்றப்பட்டது.

உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு 1917ம் ஆண்டு கப்பலில் இந்தியா புறப்பட்டார். மெட்ராஸ் வந்த பிறகும் படுக்கையிலேயே இருந்த ராமானுஜர் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.

ராமானுஜர் தனது திறமைக்கு காரணம் குல தெய்வமான நாமகிரித் தாயார்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், "கடவுளின் அமைப்பைத் தெரிவிக்கவில்லையெனில், எனக்கு ஒரு தேற்றமும் பொருளுள்ளதாகத் தெரிவதில்லை'', என்றார். ராமானுஜரின் உருவச்சிலை துறைமுக வளாகத்தில், இவரது நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment